Home » Articles » ஆரியம் திராவிடம் இந்தியம்

ஆரியம் திராவிடம் இந்தியம்

வரலாறு முழுக்கவே எப்போதும் இரு முரண்கள் எப்போதும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி காலத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டான்Xஅடிமை, ஆள்பவன்Xஆளப்படுபவன்பிரபுத்துவம்Xமுதலாளியம், முதலாளியம்Xமார்க்சியம், யூதம்Xகிறித்துவம், கிறித்துவம்Xஇஸ்லாம்,இந்துத்துவம்Xஇஸ்லாம் இன்னும் பல. இப்படி இந்த வரிசையில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் முக்கியமாகத் தமிழகத்திலும் ஆரியம்Xதிராவிடம் என்ற இரு பகை முரண் தொடர்ச்சியான மோதல்களால் அரசியலைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

ஆரியத்தின் துணை நின்று திராவிடத்தை வசை பாடுவதும், திராவிடத்தின் பக்கம் நின்று ஆரியத்தை எதிர்த்து வழக்காடுவதும் என இரு தரப்பு வாதங்கள் நமக்குப் புதிதல்ல. சமீபகாலங்களில் தமிழ்த் தேசியம் பிரபலமடையத் துவங்கிய பிறகு இந்தியம்Xதமிழியம் என்றொரு வாதம் முந்தைய ஆரியம்Xதிராவிடத்தை கொஞ்சம் பின்தள்ளி வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் முந்தைய ஆரியம், திராவிடம், பிந்தைய இந்தியம் போன்ற மூன்று கருத்தாக்கங்கள் தொடர்பான கட்டுரைத் தொகுப்பாக வ.பரத்வாஜருடைய கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. (நூலின் சில கட்டுரைகள் தமிழ்த் தேசியம் பற்றியும் பேசுகிறது.) நூலின் பெயர் ஆரியம் திராவிடம் இந்தியம்“.

100-00-0002-258-8_bஆரியம் திராவிடம் இந்தியம், வ. பரத்வாஜர், காவ்யா வெளியீடு, விலை: 340 ரூ

நூலின் தொடக்கத்தில் ஆரியம், திராவிடம், இந்தியம் போன்ற கருத்தாக்கங்களை, தான் எந்த நிலையில்,எந்த சிந்தாந்த அடிப்படையில் புரிந்து வைத்திருக்கிறேன், இந்த நூல் முழுக்க தான் இந்த அடிப்படையில் மட்டுமே கொண்டிருப்பதாக முதலிலேயே நூலாசிரியர் புரிய வைத்துவிடுகிறார்.

கட்டுரைத் தொகுப்பு என்று நூலாசிரியரும் பதிப்பகத்தாரும் சத்தியம் செய்து அச்சடித்தாலும் ஐம்பது தலைப்புகளும் கட்டுரைகள் அல்ல. மேலே கூறியிருப்பதைப் போல ஆரியம் திராவிடம் இந்தியம் போன்ற சொல்லாடல்களைக் குறித்த ஆசிரியரின் விளக்கம், அகராதி விளக்கம் போன்றவை, நாட்குறிப்பாக எழுதப்பட்டவை, சிறு சிறு குறிப்புகளாக எழுதப்பட்டவை என்று விதவிதமான எழுத்து வடிவங்களின் தொகுப்புகளால் ஆனது இந்தப் புத்தகம்.

இக்கட்டுரைகளும், இப்புத்தகமுமே ஒரு பொது வாசகனுக்கு உரியது இல்லையோ என்ற சந்தேகம் படிக்கத் துவங்கிய சில பக்கங்களிலேயே புரிந்துவிட்டது. கோர்க்கப்பட்ட வார்த்தைகளுக்கு இடையில் திடீரென பொ.யு.மு என்ற வார்த்தையையும் கோர்த்திருக்கிறார் ஆசிரியர். எங்காவது பொருள்குறிப்பு என்று இருக்கிறதா எனத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஏதும் தனி அகராதியாக போட்டிருப்பார்களாக இருக்கும். (மதிப்புரைக்காக மதிப்புரை.காம் அதை எனக்குப் புத்தகத்தோடு அனுப்பாமல் விட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.) அடுத்தடுத்தப் பக்கங்களில் மீண்டும் பொ.யு.மு பொய்யெனப் பொழிகிறது. நாமே யோசித்தால்தான் புரிகிறது அது பொது யுகத்திற்கு முந்தையகாலம். (முதன் முதலில் இந்தச் சுருக்கக் குறிப்பை பயன்படுத்தும்போது அதற்கான விளக்கத்தை அளிக்காமல்,சாவகாசமாக 832 வது முறை பயன்படுத்தும்போது அடைப்புக் குறிகளுக்குள் விளக்கம் தருகிறார் ஆசிரியர்.) ஒன்றல்ல இரண்டல்ல. இப்படி கூடவே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அகராதியையோ அல்லது வேறு ஏதோ ஒரு தலையணையைக் கையில் வைத்துக் கொள்வது நல்லது.

என் பார்வையில் நூலின் கட்டுரைகள் அனைத்தும் முழுமையான கட்டுரைகளும் அல்ல. பல கட்டுரைகள் என நூலில் பட்டியலிடப்படுபவை கட்டுரைகளுக்கு முந்தைய நிலையில் தயாரிக்கப்பட்ட குறிப்புகளின் தொகுப்பே. குறிப்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளியை நிரப்பி நாமே புரிந்து கொள்ளும் வகையிலான குறிப்புத் தொகுப்புகளும் ஏராளமாய் நூல் முழுக்க இருக்கின்றன. அந்த வகையில் நூல் ஆசிரியர் வாசகனுடனான தன்னுடைய தொடர்பை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். அந்த வகையில் முன்பே கூறியதைப் போல இது எளிய வாசகனுக்கான நூல் இல்லையோ என்ற தோற்றத்தை மேலும் மேலும் அதிகமாக்குகிறது.

வரலாற்று நோக்கிலிருந்து ஆராயும்போது பல குறிப்புகளை அதன் காலக்கணக்கின் அடிப்படையில் அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. புராண, இதிகாச நிகழ்வுகளை வரலாறாக அப்படியே எடுத்துக்கொள்ளும் போக்கு நூல் முழுதும் இருக்கிறது.

எப்போதுமே ஒடுக்கப்படும் ஒரு வர்க்கத்தின் பக்கமே துணை நிற்க விரும்புகிற என் உள்ளம், இந்நூலின் இளவரசன் மரணம் முதல் இறுதிச்சடங்கு வரைஎன்ற குறிப்புகள் பகுதியைப் படிக்கும் போது ஆசிரியரின் பிற்போக்குத்தனத்தையும், மிகவும் பாவப்பட்ட ஒன்றுமறியாத ஒரு குறிப்பிட்ட ஆதிக்கசாதி கட்சிக்கான வழக்கறிஞராக வாதாடுவதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ‘தலித்துகள் சிறு குறிப்புஎன்றதொரு குறிப்புக் குவியலும் அப்படியே ஓர் உயர் வர்க்க மனோபாவத்தையும், தாய் மதத்துக்கு திரும்பக்கோரும் சங்கப் பரிவாரங்களின் குரலையும் கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு பற்றிய ஆசிரியரின் குரலும் அத்தகையதே.

அமர்த்தியா சென் X நரேந்திர மோடி குறித்த ஒரு கட்டுரையில், “அமர்த்தியா சென்னின் பொருளாதாரக் கொள்கைகள், விருதுகள் குறித்து மோடி பெரிதாக இதுவரை எந்தக் குறையும் சொல்லாத நிலையில் மோடி குறித்து அமர்த்தியா சென் குறித்து அவதூறான கருத்துகள் தெரிவித்தது…” என்றொரு வாதத்தை முன் வைக்கிறார். என்ன ஒரு அட்டகாசமான வாதம். இதற்கு மேலும் புத்தக மதிப்புரையில் எதுவும் விமர்சித்தால், ‘நீங்கள் எழுதிய படைப்புகள் எதையும் நான் விமர்சிக்காதபோது என் படைப்புகளை நீங்கள் ஏன் விமர்சிக்கிறீர்கள்என்று நூலாசிரியர் கேட்டுவிடுவாரோ என்று அச்சம் காரணமாக கருத்துச் சுதந்திரத்தின் கல்லறையின் மீது ஏறி நின்று முடித்துக்கொள்கிறேன்.

அமர்த்தியா சென்னுக்காவது பொருளாதாரக் கோட்பாடுகளும், ஒரு விருதும் கை வசம் இருக்கிறதுஎனக்கென்று இதுவரை தனிப்பட்டப் படைப்புகள் இதுவரை எதுவுமில்லை, அவரால் என்னை விமர்சிக்க முடியாது.

– மாமூலன்

 

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0002-258-8.html

 

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: